ANTARABANGSA

காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது – பெஞ்சமின் நெதன்யாகு தகவல்

இஸ்தான்புல், அக் 26: காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை நடத்த தயாராகி வருவதாகக் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

“காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம் மற்றும் தாக்குதலின் தருணம் அமைச்சரவையால் தீர்மானிக்கப்படும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் நெதன்யாகு கூறினார்,

“எப்போது, எப்படி, எவ்வளவு என்பது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மேலும், என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு செயல் படுத்தப் படும் என்பது குறித்தும் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா – அனடோலு ஏஜென்சி


Pengarang :