SELANGOR

திடீர் வெள்ளத்தைத் தடுக்க வடிகால்கள் தீவிரமாகச் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன – பலாகோங் தொகுதி

ஷா ஆலம், அக் 27.: சமீபத்தில் பெய்த கன மழையைத் தொடர்ந்து, திடீர் வெள்ளத்தைத் தடுக்க, பலாகோங் தொகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் உள்ள வடிகால்கள் தீவிரமாகச் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

ஜாலான் கஸ்தூரி மற்றும் சுங்கை சுவா உள்ளிட்ட அடிக்கடி பாதிக்கப்படும் மைய இடங்களில் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளப் பட்டதாகச் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் கூறினார்.

“எனது ஆய்வில், இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான வடிகால்கள் பழைய வடிவமைப்பு அல்லது சிறிய அளவில் இருப்பதைக் கண்டேன். குப்பைக் குவியல் களுடன் சேர்ந்து, அது நீர் ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.

எதிர்காலத்தில் வடிகால் மேம்பாடு மேற்கொள்ளும் போது அவ்விடங்களைக் கட்டம் கட்டங்களாகச் சுத்தம் செய்ய வேண்டும் என காஜாங் நகராண்மை கழகம் மற்றும் கேடிஇபி கழிவு மேலாண்மையை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தவறான இடத்தில் குப்பைகளை வீசாமல் சுற்றியுள்ள பகுதியைச் சுத்தமாக வைத்திருக்குமாறு பலாகோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுன் வெய் சமூகத்திற்குச் அறிவுறுத்தினார்.


Pengarang :