ANTARABANGSA

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,028ஆக உயர்வு

காஸா, அக் 27- இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கி பாலஸ்தீன தீபகற்பம்
மீது இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்டு வரும் வான் தாக்குதல்களில்
கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,028ஆக உயர்ந்துள்ளது.

காஸா தீபகற்பம் மீது இஸ்ரேல் அத்துமீறி மேற்கொண்டு வரும்
தாக்குதல்களில் நேற்று வரை 2,913 சிறார்கள், 1,709 பெண்கள் மற்றும் 397
முதியவர்கள் உள்பட 7,028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சின்
பேச்சாளர் அஷ்ராப் அல்-குட்ரா கூறினார்.

மேலும், 18,484 பேர் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக அந்த
பேச்சாளரை மேற்கோள் காட்டி அனாடோலு நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடந்த 24 மணி நேரத்தில் 43
கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் 481 பேர்
கொல்லப்பட்டனர். இத்தாக்குல்களில் பலியானோரில் பெரும்பாலோர்
பாதுகாப்பான பகுதி இஸ்ரேல் கூறிக் கொள்ளும் காஸா தீபகற்பத்தின்
தென் பகுதிக்கு இடம் பெயந்தவர்களாவர் என்று அஷ்ராப் சொன்னார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை இதுவரை 731 படுகொலைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் 940 சிறார்கள் உள்பட
1,650 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலுக்கு 57 மருத்துவமனைகள் உள்ளிட்ட
சுகாதார மையங்களும் இலக்காகியுள்ளன. இத்தாக்குதல்களில் 12
மருத்துவமனைகள் மற்றும் 32 பராமரிப்பு மையங்கள் செயல்படாத
நிலைக்கு உள்ளானதோடு 101 மருத்துவ அதிகாரிகளின் உயிரையும்
பறித்துள்ளது.


Pengarang :