NATIONAL

வாகனப் பதிவு எண்ணை  கொண்டு சுங்கக் கட்டணப் பரிவர்த்தனைகள் துரிதப்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ. 6: வாகனப் பதிவு எண்ணை கொண்டு  (ANPR) சுங்கக் கட்டணப் பரிவர்த்தனைகள் கணக்கிடும் முறையைப் பயன்படுத்தும் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் சுங்கக் கட்டணப் பரிவர்த்தனைகள் துரிதப்படுத்தப்படும்.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) அமைப்பைப் பயன்படுத்தும். இதனால் பயனர்கள் வாகனத்தை மெதுவாக செலுத்துவோ அல்லது வாகனங்களை நிறுத்தவோ அவசியமில்லை என பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் கூறினார்.

“நாங்கள் எப்போதும் டோல் பிளாசாக்களை ஆய்வு செய்கிறோம், குறிப்பாக டச் என் கோ, ஸ்மாரட்டாக் மற்றும் RFID பாதைகள் ஆகியவை ஆகும்.

“நாங்கள் “MLFF“ ஐ செயல்படுத்தி, “ANPR“ உடன் “RFID“ ஐ இணைக்க விரும்புகிறோம், இதன் மூலம் போக்குவரத்து வேகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், பயனர்கள் மற்றும். கார் எண்ணைக் கண்காணிக்க முடியும். MLFM ஐப் பயன்படுத்தும் போது இந்த முறை வேகமாகவும் திறமையாகவும் இருக்கலாம்.

“இந்த முறையைப் பயனபடுத்தும் பல நாடுகளை நாங்கள் ஆராய்ச்சி செய்துள்ளோம். இப்போது ஆய்வு செயல் முறையில் உள்ளது மற்றும் 2024 இல் சோதனைக்கு முயற்சிப்போம்,” என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

சுங்கச்சாவடிகள் மற்றும் தடுப்பு இல்லாமல் சுங்கவரி வசூல் முறையை அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்ற அஃப்னான் ஹமிமி தைப் அசாமுடியினின் (பிஎன்-அலோர் ஸ்டார்) கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.


Pengarang :