SELANGOR

கிள்ளான் நகர வாரிசான் பெஸ்தாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், நவ 6: நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கோத்தா ராஜா கிள்ளான் மைதானத்தில் நடைபெறும் 2023 கிள்ளான் நகர வாரிசான் பெஸ்தாவில்  கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, கிள்ளான் நகரை ஒரு மாநகரமாகப் பிரகடனப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முகநூல் மூலம் சிலாங்கூர் சுற்றுலாத்துறை  தெரிவித்தது.

“இதில் கலந்துக்கொள்பவர்களுக்காக இலவசச் செண்டோல், பாரம்பரிய உணவு பண்டங்கள், பல்வேறு இனங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், அத்துடன் கைவினைக் பொருட்களின் கண்காட்சிகள் மற்றும் விற்பனை ஆகியவைக் காத்திருக்கின்றன. .

“ராயல் கிள்ளான் பாரம்பரிய அணிவகுப்பு, குழந்தைகளுக்கான பாரம்பரிய உடை அலங்காரப் போட்டி, வாகனம் இல்லா நாள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் தயாரிப்புகளைச் சந்தைப் படுத்துதல் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம், நவம்பர் 23 அன்று கிள்ளான் ஒரு மாநகரமாக தரம் உயரத்தப் படும் என்று எம்பிகேயின் தலைவர் தெரிவித்தார்.

அவரது தரப்பு இப்போது பொது வசதிகளை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது, குறிப்பாகச் சாலைகள் மேம்பாடு மீது என நோரைனி ரோஸ்லானின் குறிப்பிட்டார்.


Pengarang :