SELANGOR

வெள்ள நிவாரண மையங்களுக்கு மந்திரி புசார் வருகை

சிப்பாங், நவ 9 – வெள்ளம் காரணமாக இரு தற்காலிக நிவாரண
மையங்களில் தங்கியுள்ள இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சென்று கண்டார்.

டெங்கில் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண
மையத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் சென்ற மந்திரி பெசார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட்டு வரும் டத்தோ அகமது
ரசாலி சமூக மண்டபத்திற்கு வருகை புரிந்தார்.

பின்னர் அவர், வெள்ளம் காரணமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த
சைபர் ஜெயாவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்
செல்லும் கிவா சாலை சந்திப்பு சமிக்ஞை விளக்கு பகுதியை
பார்வையிட்டார்.

மந்திரி புசாருடன் ஆட்சிக்குழு உறுப்பினர்களான முகமது நஜ்வான்
ஹலிமி மற்றும் பெர்ஹான் அமான் ஷா ஆகியோருடன் சுங்கை பீலேக்
சட்டமன்ற உறுப்பினர் லி கியான் கியோங் ஆகியோரும் வருகை
புரிந்தனர்.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள 11 துயர்
துடைப்பு மையங்களில் 186 குடும்பங்களைச் சேர்ந்த 740  தங்கியுள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 196 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேராக இருந்தது.


Pengarang :