ECONOMY

செகி ஃபிரெஷ் பேரங்காடி உள்பட ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 19- செகி ஃபிரெஷ் பேரங்காடிகள் உள்பட மாநிலத்தின் ஆறு இடங்களில் இன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான மலிவு விற்பனை செக்சன் 27ஏ, டேவான் எம்.பி.எஸ்.ஏ. பூலாய் ( கோத்தா கெமுனிங் தொகுதி), கம்போங் தாசேக் தம்பஹான் (லெம்பா ஜெயா தொகுதி) மற்றும் புளோரா டாமன்சாரா (புக்கிட் லஞ்சான் தெகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இந்த விற்பனைகளில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இது தவிர சவுஜானா உத்தாமா, கோல சிலாங்கூர் மற்றும் காஜாங்கில் உள்ள செகி ஃபிரெஷ் பேராங்காடிகளில் இன்று நடைபெறும் மலிவு விற்பனையில் பல விதமான பொருள்களை பொது மக்கள் மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த விற்பனையில் ஒரு கோழி 7.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் ஒரு சியாகாப் மீன் 7.00 வெள்ளிக்கும் கோதுமை ஒரு பாக்கெட் 2.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் கிடைக்கும்.

இந்த மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு இதுவரை 4 கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :