SELANGOR

16 ஒற்றைத் தாய்மார்கள் சங்கங்களுக்கு RM80,000 மானியம் – மாநில அரசு

ஷா ஆலம், நவ 23: கடந்த ஆண்டு சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட 16 ஒற்றைத் தாய்மார்கள் சங்கங்களுக்கு மாநில அரசு மொத்தம் RM80,000 மானியமாக வழங்கியது.

925 உறுப்பினர்களைக் கொண்ட அச்சங்கங்கள் தலா RM5,000 மானியம் பெற்றதாகப் பெண்கள் மற்றும் குடும்ப அதிகார ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.

“இந்த மானியத்தின் நோக்கம், ஒற்றைத் தாய்மார்கள் நலன் அபிவிருத்திக்கு  சங்கங்கள் மேற்கொள்ளும்  உதவி  நடவடிக்கைகளை விரைவாகச் செயல் படுத்துவதற்காகும்.

“2024 ஆம் ஆண்டில், மாநில அரசு, புறக்கணிக்கப்பட்ட ஒற்றைத் தாய்மார்கள் இச்சங்கங்களில் சேர்க்க அதன் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் பெண்கள் அதிகாரமளிக்கும் நிகழ்ச்சி நிரல் குறித்து லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையட் அஹ்மட் சையட் அப்துல் ரஹ்மான் அல்ஹடாட் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பெண்கள் தலைமைத்துவ அகாடமியை உயர்த்த, பல்வேறு எதிர்கால திட்டமிடல்கள் செயல்படுத்தப்படும் என்று அன்பால் சாரி தெரிவித்தார். சிலாங்கூரில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோ-சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற கல்விகளை வழங்கப்படும் என அவர் கூறினார்.

“மேலும், மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள குறிப்பிடத்தக்க ஏஜென்சிகளுடன் வேலை மற்றும் திறன்களை பொருத்த திட்டங்கள் மூலம் பெண்கள் தலைமைத்துவ அகாடமி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை கண்டறிய திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :