SELANGOR

வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிக்கு மாநில அரசு வெ.300,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், டிச 1- மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் வெள்ளத்திற்குப்
பிந்தைய துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் தன்னாலவர்
அமைப்புக்கு (செர்வ்) 300,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு அதிகாரிகள்
மூலம் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மைத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இது வெறும் தொடக்க நிதிதான். ஆனால், இது போதாது. அவசியம்
ஏற்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அவர் சொன்னார். இங்குள்ள
காம்ப்ளெக்ஸ் ஜெனராசி மூடா, சுக்கான் சிலாங்கூர் தலைமையகத்தில்
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக அவர், வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவு உபகரணங்களை
செர்வ் அமைப்பிடம் வழங்கினார். ரப்பர் கையுறை, ரப்பர் குழாய்,
துடைப்பம், வாட்டர் ஜெட்ஸ் கருவில் உள்ளிட்ட உபகரணங்கள் அந்த
அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.

நவம்பர் மாதம் தொடங்கி பல மாதங்களுக்கு நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக
அரசாங்கம் இந்த முன்னேற்பாடுகளைச் செய்து வருவதாக நஜ்வான்
குறிப்பிட்டார்.


Pengarang :