ALAM SEKITAR & CUACAANTARABANGSA

மெராப்பி எரிமலை 2,000 மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழ்ந்தது

ஜகார்த்தா, டிச 3- மத்திய ஜாவா மற்றும் யோக்யகர்த்தா எல்லையில் அமைந்துள்ள மெராபி எரிமலை சாம்பலைக் கக்கியதால்  போயோலாலி மற்றும் மகேலாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை சாம்பல் மழை பெய்தது.

இரவு 7.27 மற்றும் 7.47 மணிக்கு இரண்டு முறை நிகழ்ந்த இச்சம்பவத்தில் சாம்பல் உமிழ்வு   2,000 மீட்டர் வரை பீறிட்டு எழுந்ததாக மாநில எரிமலை கண்காணிப்பு மையமான பி.வி எம்.பி ஜி. கூறியது.

போயோலாலியில் உள்ள செலோ கிராமமும் மகேலாங்கில் உள்ள சவாங்கன் கிராமமும் சாம்பல் பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (பி.என்.பி.பி.) தெரிவித்தது.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய  கிளாக்கா கிராமத்தின் தலைவர் மார்வோடோ, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதியளித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்ளூர் அதிகாரிகள் முகக் கவசங்களை விநியோகித்ததோடு  கிராம விழிப்பூட்டல் குழு தீவிரப்படுத்தப்பட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த மே 11, 2018 முதல்  மெராப்பி எரிமலையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டு நவம்பர் முதல் எச்சரிக்கை நிலையில் உள்ளது.


Pengarang :