NATIONAL

கிளந்தானில் வெள்ளம்- 6,009 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோத்தா பாரு, டிச 5 – கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் மாவட்டத்தில்
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,952
குடும்பங்களைச் சேர்ந்த 6,009 பேர் 13 தற்காலிக நிவாரண மையங்களில்
தஞ்சம் புகுந்துள்ளனர்.

குவால் திங்கி தேசிய பள்ளியில் 296 குடும்பங்களை சேர்ந்த 903 பேரும்
ரந்தாவ் பாஞ்சாங் 2 தேசிய பள்ளியில் 629 குடும்பங்களைச் சேர்ந்த 1,881
பேரும் குவால் தோக் டே பள்ளியில் 264 குடும்பங்களைச் சேர்ந்த 813
பேரும் குவால் பெரியோக் பள்ளியில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 153
பேரும் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கம் நாடியுள்ளதாக
மாநில சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் செயலி கூறியது.

மேலும், தாசேக் பாக்காங் மதராஸாவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 210
பேரும் பாடாங் லிச்சின் பள்ளிவாசலில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 131
பேரும் ஸ்ரீ கியாம்பாங் தேசிய பள்ளியில் 107 குடும்பங்களைச் சேர்ந்த 345
பேரும் லாத்தி தேசிய பள்ளியில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும்
துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

சிச்சா திங்கி தேசிய பள்ளி, லாத்தி தேசிய பள்ளி, பாரோ பியா தேசிய
பள்ளி, குவால் பெரியோக் தேசிய பள்ளி கெடாய் தஞ்சோங் தேசிய பள்ளி
ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையங்களில்
எஞ்சிய 1,500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :