NATIONAL

மீன் பிடிக்கும் போது நேர்ந்த துயரம்- மாற்றுத் திறனாளி நீரில் மூழ்கி மரணம்

பாசீர் மாஸ், டிச 5 – மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையைக்
கொண்டிருக்கும் 44 வயது ஆடவர் நீரில் மூழ்கி மாண்டார். இச்சம்பவம்
ரந்தாவ் பாஞ்சாங், கம்போங் பாக்காட்டில் நேற்று பிற்பகல் 1.30
மணியளவில் நிகழ்ந்தது.

முகமது கமாருடின் யாஹ்யா என்ற அந்த ஆடவர் தனது வீட்டிற்கு
அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே வீசிய வலையைச்
எடுப்பதற்கு தனியாகச் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாசீர்
மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமா அஸுருள் முகமது
கூறினார்.

வலையை இழுத்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்த
அவர், அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரில் மூழ்கியதாக இன்று
இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தன் கணவர் நீரில் மூழ்கியதை தன் அண்டைக் வீட்டுக்காரர் மூலம்
அவரின் மனைவி நுர் ஜூபைலா ரம்லி (வயது 36) தெரிந்து கொண்டதாக
அவர் மேலும் சொன்னார்.

அண்மைய சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக வெள்ளம்
ஏற்பட்ட பகுதியில் முகமது கமாருடின் வலை வீசி மீன் பிடிக்கச்
சென்றதாகக் கூறிய அவர், வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் அவ்வாடவர்
இவ்வாறு செய்வது வழக்கம் என்றார்.

உயிரிழந்த ஆடவரின் சடலம் பரிசோதனைக்காகப் பாசீர் மாஸ்
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர்,
இச்சம்பவம் தீடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


Pengarang :