NATIONAL

மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

கோத்தா கினபாலு, டிச 8: நேற்று பிற்பகல் கம்போங் பெர்பாடுவான் ரியா 1, குடாட்டில் உள்ள செயற்கைக் குளத்தில் குளித்த 7 முதல் 11 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மூன்று சிறுவர்கள் வான் ஹெர்மி (11), முகமட் சியாவான் (7) மற்றும் நூருல் இசா (11) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குடாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் இஷாக் ஜபாஸ் கூறினார்.

“சம்பவத்தின் போது, அம்மூன்று சிறுவர்களும் கட்டுமான பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குளத்தில் குளித்ததாக நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பாக எங்களுக்கு மாலை 5.36 மணியளவில் அவசர அழைப்பு வந்தது என அவர் தெரிவித்தார்.

“உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, இயந்திரங்கள் மற்றும் EMRS (அவசர சேவை பிரிவு) உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களையும் பொதுமக்கள் குளத்திலிருந்து வெளியே எடுத்தனர்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சுயநினைவின்றி பாதிக்கப்பட்ட மூவரையும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் EMRS மூலம் முதலுதவி வழங்கப்பட்டது. பின் மேல் நடவடிக்கைக்காகக் குடாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இஷாக் கூறினார்.

“மருத்துவமனையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மூவரும் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :