NATIONAL

மடாணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது

கோலாலம்பூர், டிச 8 – மடாணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவைக்
குறிக்கும் வகையிலான மூன்று நாள் கொண்டாட்டம் இன்று புக்கிட்
ஜாலில் அரங்கில் பல்வேறு ஜனரஞ்சக நிகழவுகளுடன் தொடங்குகிறது.

இந்த கொண்டாட்டத்தையொட்டி சாலை போக்குவரத்து குற்றங்களுக்கான
காவல் துறையின் 50 விழுக்காட்டு கழிவு, ரஹ்மா ரொக்க உதவிக்கான
பதிவு, சிறப்பு விடுமுறை காலத் திட்டம், இலவச மார்பக மற்றும்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, பாலியல் துன்புறுத்தலுக்கு
எதிரான பிரசார இயக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொழில் முனைவோர், பேரங்காடிகள், பல்பொருள் விற்பனை
மையங்களின் 226 நடத்துநர்களை உள்ளடக்கிய மடாணி மெகா விற்பனை
விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தையில் விற்கப்படும்
பொருள்களுக்கு 30 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்
ஹமிட் ஹமிடி மைநெக்ஸ்ட் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன்
பயிற்சித் திட்டத்தை (திவேட்) தொடக்கி வைப்பார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள் போக்குவரத்து
நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக பொது போக்குவரத்தைப்
பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதே வளாகத்தில் இன்றிரவு 2023ஆம் ஆண்டிற்கான மலேசிய கிண்ண
கால்பந்து இறுதியாட்டமும் 2023ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண
ஆண்கள் ஜூனியர் ஹாக்கிப் போட்டியும் நடைபெறவுள்ளதால் இங்கு
கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 20222ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஆட்சிக்கு வந்தது முதல்
ஒற்றுமை அரசாங்கம் அறிமுகப்படுத்திய திட்டங்கள், கொள்கைகளை
மக்களுக்கு விளக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.


Pengarang :