NATIONAL

பாசீர் மாஸில் உள்ள ஆறு துயர் துடைப்பு மையங்களில் 1,500 பேர் அடைக்கலம்

கோத்தா பாரு, டிச 8 – பாசிர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 9.00 மணி நிவரப்படி 502 குடும்பங்களைச் சேர்ந்த 1,495 பேர் தற்காலிக நிவாரண மையங்களில்  தங்கியுள்ளனர். நேற்றிரவு  இந்த எண்ணிக்கை 1,581 பேராக (527 குடும்பங்கள்) இருந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும்  மாவட்டத்தில்  உள்ள 6 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாகச் சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் செயலி கூறியது.

அவர்களில் 187 குடும்பங்களை உள்ளடக்கிய 559 பேர் குவால் தோ டேக் தேசியப் பள்ளியில் தங்கியுள்ளனர். குவால் பெரியோக் தேசியப் பள்ளியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேரும்  பாரோ பியால் தேசியப் பள்ளியில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேரும்  கெடாய் தஞ்சோங் தேசியப் பள்ளியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் குவால் பெரியோக் தேசியப் பள்ளியில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேரும்   மஸ்ஜித் முக்கிம் பாத்தாங் லிசின்  நிவாரண மையத்தில் 119 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :