SELANGOR

தன்னார்வ சேவைகள் மற்றும் இலவச சட்ட ஆலோசனை – தாமான் டெம்ப்ளர் சமூக சேவை மையம்

ஷா ஆலம், டிச 12: உள்ளூர் மக்களுக்குத் தன்னார்வ சேவைகள் மற்றும் இலவச சட்ட ஆலோசனை என இரண்டு திட்டங்களை தாமான் டெம்ப்ளர் சமூக சேவை மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

K.I.T.A தன்னார்வத் தொண்டர்கள் (தன்னார்வத் தொண்டு, புதுமை, செயல், பொறுப்பு) மூலம் சேவை செய்வது தாமான் டெம்ப்ளரில் உள்ள சமூகத்திற்கு உதவியாக இருக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.

“உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகச் சமூக சேவை மையத்தின் கதவுகள் எப்போதும் தாமான் டெம்ப்ளர் மக்களுக்குத் திறந்திருக்கும்.

“நீங்கள் ஆலோசனையை பெற விரும்பினாலும், சிலாங்கூர் அரசாங்கத்தின் திட்டங்கள் அல்லது ஏதேனும் உதவிகளைப் பற்றி மேலும் அறியவும், சமூக சேவை மையக் குழுவைத் தொடர்பு கொள்ள வெட்கப்பட வேண்டாம்” என்று அவர் கூறினார்,

தாமான் டெம்ப்ளர் சமூக சேவை மையத்தின் திறப்பு விழாவை மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை இணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு தொடங்கி வைத்தார்.

தாமான் செலாயாங் செகார், பத்து கேவ்ஸ்சில் அமைந்துள்ள தாமான் டெம்ப்ளர் சமூக சேவை மையம், பொது விடுமுறை நாட்களை தவிர, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.


Pengarang :