SELANGOR

சிறப்பான சேவையை வழங்குவதற்கு விருதுகளும் பட்டங்களும் ஊக்கமளிக்கும்

கிள்ளான், டிச 12- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் 78வது பிறந்த
நாளை முன்னிட்டு டர்ஜா கெபெரசாரான் டத்தோ படுகா மக்கோத்தா
சிலாங்கூர் (டி.பி.எம்.எஸ்.) விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ள மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம், மக்களுக்குச் சிறப்பான
சேவையைத் தொடர்ந்து வழங்க உறுதி பூண்டுள்ளார்.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல் ஹாஜ்ஜின் பிறந்த நாளை
முன்னிட்டு இந்த விருது தமக்கு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக்
கொண்ட அவர், பழைமையான கிராமங்கள், பாரம்பரிய கலைகள் போன்ற
தனக்கே உரிய தனித்துவத்தைக் கொண்ட சிலாங்கூரின் சுற்றுலாத்
துறையை மேம்படுத்துவது தனது தலையாய நோக்கமாகும் எனக்
குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷா, பாலாய் ரோங்ஸ்ரீயில்
நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக டத்தோ இங், மாநில நிதி அதிகாரி அகமது பாட்ஸ்லி, அகமது
தாஜூடின், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன்
ஓமார் கான் உள்பட ஒன்பது போர் ஆட்சியாளரிடமிருந்து டி.பி.எம்.எஸ்.
விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே, டத்தோ அந்தஸ்து கொண்ட டர்ஜா கெபெசாரான் டத்தோ
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (டி..எஸ்.ஐ.எஸ்.) விருதைப் பெற்ற
சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி
முகமது யாத்திம், இந்த விருது கிடைத்தது குறித்து தாம் பெருமிதம்
கொள்வதாகக் கூறினார்.

நான் கடந்த 12 ஆண்டுகளாகச் சிலாங்கூரில் பணியாற்றி வருகிறேன். இந்த
விருது சிலாங்கூர் மாநில அரசில் மேலும் ஆக்ககரமான முறையில் சேவையாற்றுவதற்குரிய உத்வேகத்தை எனக்கு வழங்கியுள்ளது என்றார்
அவர்.


Pengarang :