பெட்டாலிங் ஜெயா, டிச 12: கோவிட் -19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பள்ளிகளில் முகக்கவரிகளை விநியோகிக்க கோத்தா டமன்சாரா மாநில சட்டமன்ற உறுப்பினர் உத்தேசித்துள்ளார்.

மாணவர்களிடையே தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என முஹம்மட் இசுவான் அஹ்மட் காசிம் கூறினார்.

“கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, அதே போல் இன்ஃப்ளூயன்ஸாவும் அதிகரித்து வருகின்றன. மக்கள் வெளியே செல்வதைத் தடுக்க முடியாது, அதனால் அவர்களுக்கு முகக்கவரிகளை அணிய நினைவூட்டுப்படுகிறது.

“எனவே, பள்ளிகளுக்குக் குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளுக்கு முகக்கவரிகளைக் கோத்தா டமன்சாரா தொகுதி அலுவலகம் விநியோகிக்கும்” என்று அவர் கூறினார்.

செகஷன் 4 சமூக மண்டபத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து பராமரிப்பு சுகாதார நிகழ்வில், கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முகக்கவரிகளை அணியுமாறு இசுவான் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.