SELANGOR

மோனோரயிலின் டயர் தீப்பிடித்து சாலையில் விழுந்ததில் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்

கோலாலம்பூர், டிச 20.: நேற்று தித்திவாங்சா மோனோரயில் நிலைய வழித்தடத்தில், மோனோரயிலின் டயர் தீப்பிடித்து ஜாலான் துன் ரசாக் சாலையில் விழுந்ததில் அச்சாலையைப் பயன்படுத்துவோர் பதற்றம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மதியம் 12.57 மணிக்குத் தனக்கு தகவல் கிடைத்தது என மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) கோலாலம்பூரின் ஆபரேஷன்ஸ் கமாண்டர் நூரிட்ஸ்வான் முகமட் நூர் கூறினார்.

“தித்திவாங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) தீயணைப்பு வீரர்கள் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

“சம்பவ இடத்தில் மோனோரயில் டயர்கள் விழுந்து தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பின்னர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

“இந்த சம்பவத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

“மேலும், இந்த சம்பவத்திற்கு காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :