NATIONAL

போதைப் பொருள் குற்றங்களுக்காக 2021 முதல் 77 பேர் வெளிநாடுகளில் கைது

கோலாலம்பூர், டிச 29 – பல்வேறு போதைப் பொருள் குற்றங்களுக்காகக்
கடந்த 2021 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை 77 மலேசியர்கள்
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 32 பேர் கடந்த 2021ஆம் ஆண்டிலும் 17 பேர் 2022ஆம்
ஆண்டிலும் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப் பொருள்
குற்ற விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது கைருடின்
முகமது டின் கூறினார்.

இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் 11 பேர் பல்வேறு நாடுகளின்
நுழைவாயில்களில் பிடிபட்டனர். அவர்கள் பிறரின் தூண்டுதலின் பேரில்
போதைப் பொருளைக் கொண்டுச் செல்லும் பணியை மேற்கொண்டவர்களாவர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்நிய நாடுகளுக்குப் போதைப் பொருளைக் கொண்டுச் செல்லும்
மலேசியர்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவதாக
அவர் சொன்னார்.

வெளிநாடுகளுக்குப் போதைப் பொருளைக் கடத்திச் செல்வதற்கு வெ.5,000
முதல் 10,000 வரை சம்பளம் வழங்கப்படும் என போதைப் பொருள்
கடத்தல் கும்பல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் விளம்பரங்களால்
ஈர்க்கப்படும் மலேசியர்கள் இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடுவதாக
அவர் குறிப்பிட்டார்.

நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. போதைப்
பொருளை கடத்துவதற்கு அதிக வெகுமதி தரப்படும் என்பனப் போன்ற
ஆசை வார்த்தைகளை வழங்கி வரும் கும்பல்களுக்கு எதிராக விழிப்புடன்
இருக்கும்படி பொது மக்களை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறோம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :