NATIONAL

படகைச் செய்யும் போது நேர்ந்த துயரம்-மின்சாரம் தாக்கி மீனவர் மரணம்

மாராங், ஜன 17- இங்குள்ள கோல சுங்கை மாராங்கில் நேற்று காலை
படகை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்சாம்
தாக்கி மரணமடைந்தார்.

உலு திரங்கானு, கம்போங் புக்கிட் மெங்காவானைச் சேர்ந்த ஜாய் ஹிஷாம்
ஜய்டிர் (வயது 24) என்ற அந்த ஆடவர் அப்படகில் மின்விளக்கை
பயன்படுத்தி பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது
மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று மாராங்
மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. முகமது ரெஸ்மான் கூறினார்.

அந்த இளைஞர் உயிரற்ற நிலையில் நேற்று காலை 8.30 மணிக்குக் கண்டு
பிடிக்கப்பட்டதாக ரெஸ்மான் செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது
தெரிவித்தார்.

உடல் சவப்பரிசோதனைக்காகச் சுல்தானா நுர் ஸாஹைரா
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அவ்வாடவர் மின்சாரம்
தாக்கி உயிரிழந்து உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

அந்த இளைஞரின் மரணத்தில் சூது நிகழ்ந்ததற்கான தடயங்கள்
காணப்படாததால் அதனை திடீர் மரணம் என தாங்கள்
வகைப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, தாமும் தன் மகன் ஜாய் ஹிஷாமும் அந்த படகைக்
பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் பின்னிரவு 1.00
மணியளவில் தம்மை வீட்டிற்குச் செல்லும்படி தன் மகன் கேட்டுக்
கொண்டதாகவும் அவரின் தந்தையான ஜாய்டிர் ஜாஹிட் (வயது 51)
கூறினார்.


Pengarang :