ANTARABANGSA

இந்தியாவைத் தளமாகக் கொண்ட துரித உணவு நிறுவனத்தில் கஸானா நேஷனல் 4.2 கோடி டாலர் முதலீடு

புதுடில்லி, ஜன 17 – இந்தியாவை தளமாகக் கொண்ட துரித உணவு சங்கிலித் தொடர் நிறுவனமான ஆஹா! மோமோ, மலேசியாவின் சமூக சொத்து முதலீட்டு  நிதியான கஸானா நேஷனல் பெர்ஹாட்டிற்கு   15 விழுக்காட்டுப் பங்குகளை 350 கோடி ரூபாய்க்கு   (4.2 அமெரிக்க டாலர்) விற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் கடந்த செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நிறுவனம்  இந்திய முதலீட்டு நிறுவனமான ஓ.கே.ஏ.எஸ். அசெட் மேனேஜ்மென்ட்டில் இருந்து மேலும் 60 கோடி  ரூபாயை (72 லட்சம் டாலர் ) திரட்டியுள்ளது.

துரித உணவு சங்கிலி நிறுவனமான இது,  இந்த நிதியைக் கொண்டு  விரிவாக்கம் செய்வதற்கும் ஆரம்ப கட்ட முதலீட்டாளர்களுக்கு வெளியேறும் வழியை வழங்குவதற்கும்  திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டின் வழி கிடைத்த  தாராளமான வருமானத்துடன் வெளியேறுவது மகிழ்ச்சியளிப்பதாக  ஆஹா! மோமோ இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாகர் தர்யானி கூறினார்.

அதே நேரத்தில் கஸானா போன்ற ஒரு முன்னணி இறையாண்மை நிதியம் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எங்களுடன் கூட்டு சேர்ந்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவை தளமாகக் கொண்ட நிறுவனம் 2008 இல் நிறுவப்பட்டது.  35 நகரங்களில் சுமார் 630 விற்பனை நிலையங்கள் மற்றும் கியோஸ்க்களை பல்வேறு ரகங்களிலான உணவுகளை இது விற்பனை செய்கிறது.


Pengarang :