SELANGOR

எம்.பி.ஐ. ஏற்பாட்டிலான பள்ளி உபகரண உதவித் திட்டத்தின் வழி 16,800 மாணவர்கள் பயன்

ஷா ஆலம் ஜன 22- குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த 16,800 மாணவர்களுக் பள்ளிச் சீருடை மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு உதவும் நோக்கில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 16,800 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக 17 லட்சம் வெள்ளி செலவிடப்படுவதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக பொறுப்புணர்வுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார். மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் இந்த உதவிப் பணிகள் பள்ளித் தவணை விடுமுறையின் போது தொடங்கப்படும் அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளிச் சீருடைகள் மற்றும் எழுது பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்குவதற்காக ஒவ்வொரு சட்டமன்றத்தையும் சேர்ந்த 300 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளி வழங்கப்படுகிறது.

இந்த நிதியை மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடம் வரும் பிப்ரவரி மாதம் வழங்கவிருக்கிறோம். இந்த உதவியைப் பெறுபவர்களின் வசதிக்காக இந்த உதவி நிதியை கூடிய விரைவில் வழங்கவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டில் கல்வி நடவடிக்கைளுக்காக எம்.பி.ஐ. ஒரு கோடி வெள்ளியைச் செலவிட்டது. பி.டி.ஆர்.எஸ். எனப்படும் சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டம் மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் சீரமைப்பது ஆகிய பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.


Pengarang :