SELANGOR

ஸ்ரீ மூடா பிளாசாவில் கோழி, மீன் விற்பனை மையங்கள் மீது ஷா ஆலம் மாநகர் மன்றம் சோதனை

ஷா ஆலம், ஜன 23 – இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள ஸ்ரீமூடா பிளாசாவில் உயிருடன் உள்ள கோழி மற்றும் மீன்களை விற்பனை செய்யும் வளாகங்களுக்கு எதிராக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவு கடந்த சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.

இச்சோதனை நடவடிக்கையின் போது 60 கோழிகள், 30 மீன்கள், 7 கோழிக் கூண்டுகள், மீன்கள் அடங்கிய மூன்று தோம்புகள் ஆகியவை வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்ப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் சுற்றுப்புற சுகாதாரப் பிரிவை சேர்ந்த 10 உறுப்பினர்களும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் லைசென்ஸ் பிரிவைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.

இச்சோதனையின் போது வியாபாரிகளில் சிலர் உயிர்க்கோழிகள் மற்றும் மீன்களை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் தொடர்பில் வர்த்தக லைசென்ஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Pengarang :