NATIONAL

ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற ரேபிட் கே எல் பேருந்து தீப்பிடித்து

கோலாலம்பூர், ஜன 30: ஜாலான் அம்பாங்கில் உள்ள ஷாப்பிங் சென்டருக்கு முன், ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற ரேபிட் கே எல் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது பதட்டமான தருணத்தை உருவாக்கியது.

லெபோ  அம்பாங்கிற்குச் செல்லும் தாமான் முலியா ஜெயா வழித்தட பேருந்து காலை 10.52 மணியளவில் தீப்பிடித்ததாக ரேபிட் கேஎல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எந்த காயமும் மற்றும் பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து மதியம் 12.08 மணி அளவில் டிப்போவுக்கு இழுத்துச் செல்லப் பட்டது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் ரேபிட் கே எல் பேருந்து மன்னிப்பு கேட்டதோடு, தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முழு விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தது.

மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர் மற்றும் சம்பந்தப்பட்ட பேருந்தின் பின்புறம் 50 சதவீதம் தீப்பிடித்திருந்தது என கிராமட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையக் கமாண்டர், மூத்த தீயணைப்புத் தலைவர் II, முகமட் வஹபெல் முகமட் யாசின் கூறினார்.

“காலை 11.07 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ ஏற்படுவதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :