SELANGOR

RM200 மதிப்பிலான 450 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம் – சுங்கை துவா தொகுதி

ஷா ஆலம், ஜன 30: அடுத்த வாரம் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியில் வசிப்பவர்களுக்கு RM200 மதிப்பிலான 450 வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன.

குடிப்பாளர்களின் சுமையைக் குறைக்க தகுதியான பெறுநர்களுக்கு ‘’விழாக்கால பொருட்கள் வாங்கலாம்’’ என்ற (ஜோம் ஷோப்பிங் பிராயான்)  திட்டத்தின் மூலம் வவுச்சர்கள் வழங்கப் படுகின்றன என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இந்த திட்டத்தின் மூலம் ஐடில்பித்ரி, சீன புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கிய பண்டிகைகளுக்கு ஒவ்வொரு பெறுநருக்கும் RM200 வவுச்சர் வழங்கப்படுகிறது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க தனது தலைமையும் கடுமையாக உழைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, ஜோம் ஷோப்பிங் ராயா வவுச்சர் திட்டத்திற்கு RM16.48 மில்லியன் வழங்கப்பட்டது. அதில் சீனப் புத்தாண்டிற்கு

23,900 வவுச்சர்கள் 82,400 பெறுநர்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ளவை ஐடில்பித்ரி மற்றும் தீபாவளி போது வழங்கப்படும்

இது மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக நீண்ட கால முயற்சியாகக் குறைந்த வருமானம் பெறும் குழுக்களை இலக்காகக் கொண்ட மாநில அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.


Pengarang :