NATIONAL

காதல் மோசடி கும்பலால் RM12,000 இழப்பு

கூச்சிங், பிப் 2: மீரி, வடக்கு சரவாக்கில் வசிக்கும் ஆண் அரசு ஊழியர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவரின் காதல் தொடர்பு  மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டு  RM12,000 இழந்தார்.

அறிக்கையின் அடிப்படையில், 20 வயது மதிப்பு தக்க பாதிக்கப்பட்ட நபர் ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் செயலி தொடர்பை  பெற்ற பின்னர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் என மீரி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு தெரிவித்துள்ளார்.

“கடன் உதவி பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றியுள்ளார்.

“சந்தேக நபர் பணத்தை தொடர்ந்து கடன் வாங்கியதால் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் பின்னர் உணர்ந்தார். இதன் விளைவாக RM12,000 இழப்பு ஏற்பட்டது” என்று அறிக்கை ஒன்றில் அலெக்சன் நாகா தெரிவித்தார்.

இந்த மோசடி வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அலெக்ஸ்சன் கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்திற்கு குறையாத மற்றும் 10 வருடங்களுக்கு மிகாமல் சிறை தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :