NATIONAL

தடுப்புக் காவலில் இருந்து தப்பிய அந்நியக் குடியேறிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் மேலும் 100 அமலாக்கப் பிரிவினர்

கோலாலம்பூர், பிப் 2- பேராக் மாநிலத்தின் பீடோரில் உள்ள குடிநுடிழைவுத்
துறையின் தற்காலிகத் தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பிய 130 அந்நியக்
சட்டவிரோதக் குடியேறிகளை மீண்டும் பிடிக்கும் முயற்சியில்
குடிநுழைவுத் துறை மற்றும் பி.ஜி.ஏ. எனப்படும் பொது தற்காப்புப்
படையைச் சேர்ந்த 100 உறுப்பினர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று காலை தேடுதல் நடவடிக்கையைத்
தொடக்கியதாகக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ
ருஸ்லின் ஜூசோ கூறினார்.

தப்பியோடியவர்களைப் பிடிப்பதற்காகக் குடிநுழைவுத் துறை, பி.ஜி.ஏ.
மற்றும் ரேலா ஆகியவற்றைச் சேர்ந்த 275 பேர் நேற்றிரவு
களமிறக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் அந்த முகாமிலிருந்து தப்பியோடிய 131
பேரில் 130 பேரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பல்வேறு அமலாக்க
நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினரகள் தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர்.

தப்பியோடியவர்களில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

அந்த தற்காலிகத் தடுப்புக் காவல் முகாமின் ஆண்கள் புளோக்கிலிருந்த
131 பேரும் வெற்றிகரமாகத் தப்பினர்.

தப்பியோடியவர்களில் 115 பேர் ரோஹிங்கியாக்கள் என்றும் எஞ்சிய 16
பேர் மியன்மார் பிரஜைகள் என்றும் தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் முகமது நாயிம் அஸ்னாவி கூறினார்.


Pengarang :