Foto Sumber: Mingguan Wanita
NATIONAL

மார்டியின் வெங்காய உற்பத்தி வெளிநாட்டு இறக்குமதியைக் குறைக்க உதவும்- அமைச்சர் மாட் சாபு நம்பிக்கை

கோலாலம்பூர், பிப் 2- மூன்று விதமான வெங்காயம் உள்நாட்டில்
வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்ட்டுள்ளது. இதன் மூலம் அந்த
அத்தியாவசிய உணவுப் பொருளுக்கு வெளிநாட்டு இறக்குமதியைச்
சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வெங்காய இறக்குமதியை 30 விழுக்காட்டிற்குக் குறைக்கும் இலக்கை
அடைவதற்காக விவசாயத் துறை பேராக் மாநிலத்தின் கோல பீக்காம்,
பத்தாங் பாடாங் ஆகிய இடங்களில் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் மார்டி
பி.ஏ.டபள்யூ.-1 ரக வெங்காயத்தைக் கடந்த ஜனவரி 24ஆம் தேதி
பயிரிட்டதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ
முகமது சாபு கூறினார்.

கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பலனாகப் பி.ஏ..டபள்யூ.-1,
பி.ஏ.டபள்யூ-2 மற்றும் பி.ஏ.டபள்யூ-3 ஆகிய மூன்று வகை வெங்காயம்
உற்பத்தி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

மார்ட்டி பி.ஏ.டபள்யூ.-1 ரக வெங்காயத்தின் பயிரீடு மற்றும் உற்பத்தியில்
கவனம் செலுத்தும்படி மார்டிக்கு ( மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுக் கழகம்) நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர்
தெரிவித்தார்.

இந்த பயிரீட்டின் மூலம் கிடைக்கும் தரவுகள் பெரிய அளவில் வெங்காய
உற்பத்தியை மேற்கொள்ளும் அமைச்சின் திட்டங்களுக்குப் பேருதவியாக
இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாகக் கடந்த 2020ஆம்
ஆண்டு தொடங்கி நாட்டில் வெங்காய நெருக்கடி நிலவி வருவதாகக்
கூறிய அவர், இதன் காரணமாக உள்நாட்டில் வெங்காய விலை 30
விழுக்காடு அதிகரித்து கிலோ 6.00 வெள்ளியிலிருந்து 8.00 வெள்ளியாக
ஆகியுள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.


Pengarang :