NATIONAL

சீனப் புத்தாண்டை கொண்டாடும்  1,100 சீனர்களுக்கு ரிம 100 மற்றும் மெண்டரின் ஆரஞ்சுப்பழப் பெட்டிகள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர், பிப் 5: சீனப் புத்தாண்டை முன்னிட்டு 1,100 வாக்காளர்களுக்குக் குறிப்பாக முதியவர்களுக்கு ரிம100 மற்றும் மெண்டரின் ஆரஞ்சுப்பழம் பண்டார் துன் ரசாக்கின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரின் மனைவியுமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் வழங்கினார்.

இந்த நன்கொடையானது பண்டார் துன் ரசாக்கில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கைச் செலவை எளிதாக்கும் நோக்கத்தைக் கொண்டது என விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் வான் அசிசா கூறினார்.

“துன் ரசாக்கின் நகரத்தில் அதிகமனோர் ஏழ்மை நிலையில் உள்ளனர். மேலும், வயதானவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் யாரையும் விட்டு விடாமல் இருக்க முயற்சி செய்கிறோம்.

“இன்று நன்கொடைகளைப் பெற்ற குடியிருப்பாளர்கள் உதவி தேவைப் படுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், விரைவில் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டுடை முன்னிட்டு அவர்களின் சுமையைச் சிறிது குறைக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

பிரதமரின் அரசியல் செயலாளரும், பிகேஆர் பண்டார் துன் ரசாக் தலைவருமான டத்தோ அஸ்மான் அபிடின் அவர்களும் உடனிருந்தார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற அலுவலகம் அப்பகுதியில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவும் முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தும் என்று வான் அசிசா தனது உரையில் கூறினார்.

“இந்த நன்கொடை குறிப்பாகப் பண்டார் துன் ரசாக்கில் உள்ள சீனச் சமூகத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும்” என்று அவர் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :