SELANGOR

திரு அர்ஜுனன் செல்ல பெருமாளுக்குக் கிள்ளான் பெர்கேசோ பிரிஹாத்தின் குழுவால் உதவி வழங்கப்பட்டது

பந்திங், பிப் 22: திரு அர்ஜுனன் செல்ல பெருமாளுக்குக் கிள்ளான் பெர்கேசோ பிரிஹாத்தின் குழுவால் பிரிஹாத்தின் கூடை மற்றும் அடிப்படை பொருட்கள் வழங்கப்பட்டன.

இதை பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா ராய்டு வழங்கினார். அச்சமயம் கிள்ளான் சொக்சோ அலுவலக மேலாளர் திருமதி. தவமணி ராமலிங்கம் மற்றும் சினெர்ஜி  மலேசியா அதிகாரியும் உடன் இருந்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அன்று திரு.அர்ஜுனன் (59) வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சாலை விபத்தில் சிக்கினார்.

திரு. அர்ஜுனன் வீட்டிற்கு திரும்பும் போது ஜாலான் கிள்ளான்-பந்திங் பாதையில் கார் ஒன்று அவரை மோதியது. விபத்தின் விளைவாக, அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின், அவருக்கு பாலிட்ராமா வித் தீவிர அதிர்ச்சி மூளை பாதிப்பு  ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.

அவர் “Kossan Latex Industries (M) Sdn Bhd“ இல் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். இந்த விபத்தால் அவர் வேலை செய்ய முடியாமல் வருமானத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, திரு. அர்ஜுனன் 53 வயதான அவரது மனைவி திருமதி புஷ்பா பெரியசாமியால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்.

திரு. அர்ஜுனனுக்கு ஏற்பட்ட விபத்து, பணி விபத்து என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு தற்காலிக ஊனமுற்ற நலன்கள் (HUS) (நோயுற்ற விடுப்பு இழப்பீடு) மற்றும் நிரந்தர ஊனமுற்ற நலன்கள் போன்றவை கிடைத்தன.

கூடுதலாக, அவர் மறுவாழ்வு மற்றும் மருத்துவ உபகரணங்களான சக்கர நாற்காலி “Pamper“, கட்டில், “Ryles  குழாய் மற்றும் தெரெக்கியா குழாய் போன்றவற்றையும் பெற்றார்.

மேலும், திரு அர்ஜுனனை எப்பொழுதும் கவனித்துக் கொள்வதற்காக நிலையான பராமரிப்பு உதவித் தொகையைப் பெற தகுதியானவர் என்றும் டாக்டர்கள் வாரியம் முடிவு செய்தது.

அடிப்படை பொருட்களை கொண்ட பிரிஹாத்தின் கூடை வழங்கி குடும்பத்திற்கு  ஊக்கமளிக்கும்   நிகழ்வில் பெர்கேசோ வின்  பல்வேறு  உதவித் திட்டங்கள் வழங்கியது,  அக்குடும்பத்தின் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. அக் குடும்பத்தினரும் கிள்ளான் பெர்கேசோ பிரிஹாத்தின் குழுவிற்கும் பாப்பாராய்டு அவர்களுக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்து கொண்டனர்.


Pengarang :