NATIONAL

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி நன்கொடை – பிரதமர்

புத்ராஜெயா, மார்ச் 13: மலேசிய அரசாங்க ஊழியர்களின் வீடமைப்பு (பிபிஏஎம்), செலாசே, பிரிசின்ட் 17 ல் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தில் பாதிக்கப் பட்டது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்தது.

நேற்று தகவல் துறையின் மூலோபாய திட்டமிடல் கொள்கைப் பிரிவில் பணிபுரியும் 45 வயதான சுல் இஸ்மால் முகமட் பக்கீர் குடும்பத்திற்கு மடாணி சிஹாரா திட்டத்தின் கீழ் அரசியல் செயலாளர் முஹம்மட் கமில் அப்துல் முனிம் மூலம் பிரதமரிடமிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த உதவி அக்குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் என சுல் இஸ்மால் கூறினார்.

மேல் விசாரணைக்காக காத்திருக்கும் வேளையில் இந்த உதவி அக்குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உள்ளது.

இதற்கிடையில், காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தனது குடியிருப்புப் பகுதி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நாசமாகியது என்றார்.

“அனைத்து பொருட்களும் குறிப்பாக நான்கு குழந்தைகளின் பள்ளி உடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் சேதமாகின,” என்று அவர் கூறினார்.

மேலும், பிரதமரின் அக்கறைக்கும் உதவிக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுல் இஸ்மால் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயா கார்ப்பரேஷனால் வழங்கப்பட்ட போக்குவரத்து இல்லத்தில் தற்போது அக்குடும்பம் தங்கியுள்ளது.

– பெர்னாமா


Pengarang :