SELANGOR

மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தின் ஐந்து நாட்களில் 1,975.83 கிலோகிராம் உபரி உணவு சேகரிப்பு

ஷா ஆலம், மார்ச் 22: மை சேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தின் ஐந்து நாட்களில் 1,975.83 கிலோகிராம் உபரி உணவை சேகரிக்க முடிந்தது என ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தெரிவித்தது.

‘சேமிக்கப்பட்ட’ உணவு, தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்கப் படுவதாக எம்பிஎஸ்ஏ முகநூலில் தெரிவித்துள்ளது.

பஜார் வர்த்தகர்கள் விற்கப்படாத மற்றும் நல்ல நிலையில் உள்ள உணவை “MBSA MySave Food“ கூடாரத்திற்கு அனுப்பலாம். எங்கள் தன்னார்வலர்கள் உதவ தயாராக உள்ளனர்.

“விற்பனை செய்யப் படாத உணவுகள் வீணாக்கப் படுவதைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்படும் உணவின் அளவை நன்கு திட்டமிடுமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை செக்‌ஷன் 19 இல் மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டத்தை மதிப்பாய்வு செய்தபோது, எம்பிஎஸ்ஏ முன்னோடியாக உள்ள அனைத்து திட்டங்களும் அனைத்து உள்ளூர் அதிகார சபைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

தேவைப்படும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தைச் சிப்பாங் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகங்கள் பின்பற்றுகின்றன என அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு இத்திட்டம் மார்ச் 14 முதல் அடுத்த ஏப்ரல் 3 வரை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை மூன்று ரம்ஜான் பஜார்களில் மேற்கொள்ளபடும். அவை ஷா ஆலம் அரங்கம் செக்‌ஷன் 13, செக்‌ஷன் 17 மற்றும் செக்‌ஷன் 19 ஆகும்.


Pengarang :