NATIONAL

சமூக ஊடகங்களில் சிலாங்கூர் சுல்தான் மற்றும் அரச நிறுவனங்களை அவமதித்த நபர் மீது புகார்

ஷா ஆலம், மார்ச் 27: மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் மற்றும் அரச நிறுவனங்களை சமூக ஊடகங்களில் அவமதித்ததாகக் கூறப்படும் நபர் மீது மாநில அரசு காவல்துறையில் புகார் செய்தது.

முகமது நபி ஒரு பொய்யர் என்றும் அவரைப் பிராத்தனை செய்ய வேண்டியதில்லை என்று கூறி இஸ்லாத்தைக் கேலி செய்ததைத் தொடர்ந்து 42 வயதான என் கணேஸ்பரனுக்கு எதிரான புகார் அளிக்கப்பட்டதாக வீட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், மன்னர்கள், முஃப்திகள் ஆகியோருக்கு எதிராக அந்நபர் அவமானகரமான மற்றும் சங்கடமான வார்த்தைகளைக் கூறியதாகப் போர்ஹான் அமன் ஷா வலியுறுத்தினார்.

“நேற்று இரவு பெறப்பட்ட வீடியோ பதிவு பொதுமக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அமைதியின்மை மற்றும் இனப் பிளவுக்கான அபாயத்தை ஏற்படுத்தும்.

“அதைத் தொடர்ந்து மாநில அரசுக் கூட்டம் மற்றும் டத்தோ மந்திரி புசார் இந்த காவல்துறை புகாரை அளிக்க ஒப்புக் கொண்டார்,” என்று அவர் இன்று ஷா ஆலம் காவல்துறை தலைமையகத்தில் சந்தித்தபோது கூறினார்.

இதில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, மலேசிய முஸ்லிம் நுகர்வோர் சங்கம் மற்றும் சிலாங்கூர் மற்றும் பிராந்திய மலாய் குழந்தைகள் சங்கம் ஆகிய இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்) மேலும் பங்கேற்கின்றன.

2017 முதல் வெளிநாட்டில் வசிக்கும் நபரை இன்டர்போல் ஒத்துழைப்புடன்  அந் நபர் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு எதுவாக இன்டர்போல்  விசாரனைக்கும்   ஆட்படுத்த    தனது தரப்பு காவல்துறையை வலியுறுத்தும் என்று போர்ஹான் விளக்கினார்.

இந்த விவகாரம் விளையாட்டாகக் கருதாமல் இருக்க, புகார் அளிப்பது எங்கள் பொறுப்பு. அரச நிறுவனம் மற்றும் இஸ்லாமிய மதத்தின் கண்ணியம் எப்போதும் பாதுகாக்கப்படும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

சிலாங்கூர் சுல்தானையும் இஸ்லாத்தையும் அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்ந்து கணேஸ்பரனுக்கு எதிராக அவரது தரப்பு 21 விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளதாக நேற்று காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், அந்நபர் கடந்த நவம்பர் 2, 2017 முதல் ஹாம்பர்க், ஜெர்மனியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அந்த வீடியோவில், அந்நபர் 3R பிரச்சனை (மதம், இனம் மற்றும் ராஜா) முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே என்று கூறுவதுடன் இனவாத மற்றும் மதவாத சம்பந்தப்பட்ட விஷங்களை வெளியிட்டார்.


Pengarang :