ANTARABANGSA

இஸ்ரேல் தொடர் தாக்குதலில் 32,975 பாலஸ்தீனியர்கள் பலி, 75,577  பேர் படுகாயம்

அங்காரா, ஏப் 4 : கடந்த அக்டோபர் மாதம் முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் மொத்தம் 32,975 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்தில் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் 180 வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

மொத்தம் 75,577 பாலஸ்தீனியர்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதி முழுவதும் பாலஸ்தீனிய குடும்பங்களுக்கு எதிராக இஸ்ரேல் ஐந்து தாக்குதல்களை நடத்தியது, இதில் 59 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 83 பேர் காயமடைந்தனர்.

“பல உடல்கள் இன்னும் கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன மற்றும் சாலையில் கைவிடப் பட்டுள்ளன. அதே நேரத்தில் மீட்புக் குழுவினர் தாக்குதல் நடந்த இடத்தை அடைவதில் சிரமப்படுகிறார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் காசாவின் 85 சதவீத மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து போன்றவை கிடைக்காமல் வீடற்றவர்களாக உள்ளனர்.

– பெர்னாமா-அனடோலு


Pengarang :