ANTARABANGSA

கடலுக்குடியில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் -ஆய்வு கூறுகிறது

கான்பெரா, ஏப் 5 – கடலுக்கடியில் 1 கோடியே 10 லட்சம் டன் பிளாஸ்டிக்
கழிவுகள் குவிந்து கிடப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான காமன்வெல்த்
அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சிசிரோ) மற்றும் கனடா,
டொரோண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த இரு குழுக்கள்
இரண்டு கணிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி கடலுக்கடியில் உள்ள
பிளாஸ்டிக்கின் அளவு மற்றும் விநியோகத்தை மதிப்பிட்டதாக இன்று
வெளியிட்டப்பட்ட ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன மற்றும்
அவை எங்கு உள்ளன என்பதை கணிக்கும் உலகின் முதல் ஆய்வு
இதுவாகும் என்று இந்த ஆய்வுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய செசிரோ
மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளர் டெனிஸ் ஹாட்ஸ்தி கூறினார்.

ஒவ்வோராண்டும் லட்சக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில்
கலப்பதை நாம் அறிவோம். ஆனால் கடலின் அடித்தளத்தில் எவ்வளவு
கழிவுகள் படிகின்றன என்பது நமக்குத் தெரியாது என்று அவர் கூறியதாக
அந்த ஆய்வினை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளின் புகலிடமாகக் கடல் உருவாகி
வருகிறது. கடலுக்கு அடியில் 30 லட்சம் முதல் 1 கோடியே 10 லட்சம்
டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கக் கூடும் என என
மதிப்பிடுகிறோம்.

தொலை கட்டுப்பாட்டு வாகனம் மற்றும் கடலுக்கு அடியில்
மேற்கொள்ளப்பட்ட பயணம் மூலம் கிடைக்கப்பட்ட தரவுகளின்
அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது என்று டெனிஸ்
சொன்னார்.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்துக கண்டங்களிலும் பரவியுள்ள
நிலையில் 46 விழுக்காட்டு கழிவுகள் 200 மீட்டர் ஆழத்திலும் எஞ்சிய 54
விழுக்காட்டு கழிவுகள் 200 முதல் 11,000 மீட்டர் ஆழத்திலும்
பதிந்துள்ளதை தொலைக்கட்டுப்பாட்டு வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :