SELANGOR

ஐடில்பித்ரியின் முதல் வாரத்தில் சிலாங்கூர் முழுவதும் குப்பையின் அளவு குறைந்துள்ளது

ஷா ஆலம், ஏப் 25: ஐடில்பித்ரியின் முதல் வாரத்தில் சிலாங்கூர் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு குறைந்துள்ளது.

மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பியதால் குப்பையின் அளவு குறைந்துள்ளது என KDEB கழிவு மேலாண்மை நிர்வாக இயக்குனர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.

தரவுகளின் அடிப்படையில், ஐடில்பித்ரிக்கு முந்தைய இரண்டு நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 5,000 முதல் 6,000 டன்கள் வரை குப்பை சேகரிப்பு பதிவாகியுள்ளது.

இருப்பினும், ஐடில்பித்ரியின் முதல் நாள் அன்று, ஒரு நாளைக்கு சுமார் 4,000 டன்கள் மட்டுமே சேகரிப்பு இருந்தது. இது கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட 7,000 டன்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது என கூறினார்.

நேற்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட KDEBWM ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு மேலும் இரண்டு தானியங்கி டிரைவ்-த்ரூ மறுசுழற்சி மையங்கள் (ATDReC) திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை பொதுமக்கள் மிகவும் வசதியான இடத்தில் எளிதாக அகற்றுவதற்காக இந்த மறுசுழற்சி மையம் கட்டப்படும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் கட்டணம் 48 மணி நேரத்திற்குள் செலுத்தப்படும்..

“இதுவரை, இந்த மையம் சிப்பாங்கில் மட்டுமே இயங்குகிறது. மேலும் இரண்டு பிபிடிகளில் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,” என அவர் கூறினார்.


Pengarang :