NATIONAL

நான்கு யூனிட் இ-ஸ்கூட்டர் மைக்ரோ மொபிலிட்டி வாகனங்களை எம்பிஐ நன்கொடையாக வழங்கியது

சிப்பாங், ஏப் 25: இன்று  எம்பிஐ      சிலாங்கூர்,  RM55,000 க்கும் அதிக மதிப்புள்ள நான்கு யூனிட் இ-ஸ்கூட்டர் மைக்ரோமொபிலிட்டி வாகனங்களை ராயல் மலேசியன் காவல்துறைக்கு  நன்கொடையாக வழங்கியது.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் KLIA மற்றும் KLIA2 டேர்மினல்களில் பாதுகாப்பு பணியாளர்களால் மின்சார ஸ்கூட்டர்கள் பயன்படுத்தப்படும். இதனால், நாட்டின் நுழைவாயிலில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இரண்டு இ-ஸ்கூட்டர் மைக்ரோமொபிலிட்டி யூனிட்கள் KLIA இல் மற்ற இரண்டு KLIA2 இல் வைக்கப்படும். விமான நிலைய பாதுகாப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கைக்குக் கூடுதலாக பாதுகாப்புக் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று KLIA இல் இ-ஸ்கூட்டர்களை ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு, “புகார்களைப் பெறும்போது தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படுவதன் மூலம் நிச்சயமாக பாதுகாப்பபை மேலும் வலுப்படுத்த முடியும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

KLIA மற்றும் KLIA2 தெர்மினல்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 250,000 தினசரி வருகையாளர்களைப் பெறுகின்றன. ஒரு வருடத்திற்கு 60 மில்லியன் வருகையாளர்கள் பதிவு செய்யப்படுகிறார்கள் என்று அமிருடின் மேலும் கூறினார்.

“இந்த மைக்ரோமொபிலிட்டி வாகனம் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்காக மற்ற நாடுகளில் உள்ள பொது விமான நிலையங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.

“தேவையைப் பொறுத்து இந்த வசதியை அதிகரிக்கவும் எம்பிஐ தயாராக உள்ளது.

இது முதல் முறை அல்ல “முன்னர் நாங்கள் நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் போது (MCO) ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மத்திய படைப்பிரிவுக் குழுவிற்கு உதவ மின்சார மிதிவண்டிகளை (இ-பைக்குகள்) வழங்க RM2 மில்லியனை செலவிட்டோம்” என்று அவர் கூறினார்.


Pengarang :