MEDIA STATEMENT

மாணவர்களை சட்டவிரோத குண்டர் கும்பல்களில் சேர வற்புறுத்தி அடித்ததற்காக ஏழு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

கோலாலம்பூர், மே 23: கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காஜாங்கைச் சுற்றியிருக்கும் சட்டவிரோத கும்பல்களில் சேருமாறு பள்ளி மாணவர்களை அடித்து, கட்டாயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 முதல் 18 வயதுடைய ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

காஜாங்கின் பண்டார் சுங்கை லாங்கில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு இரண்டு புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து கைது செய்யப் பட்டதாக காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஜெய்த் ஹாசன் கூறினார்.

முதல் சம்பவத்தில், கடந்த மே 16 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் 13 வயது மாணவரை அதே பள்ளியை சேர்ந்த ஆண் மாணவர்கள் அணுகினர், அவர்களில் இருவர் பாதிக்கப்பட்டவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.

“பாதிக்கப்பட்டவரின் தலை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மே 17 அன்று நடந்த இரண்டாவது சம்பவத்தில், 14 வயது பள்ளி மாணவன், பண்டார் மஹ்கோத்தா  சிராஸில் உள்ள ஒரு உணவகத்தில் தனது நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவரை கேங் 24 ல் சேர அழைத்து ஒரு குழு அவரை அணுகியது. .

மூன்று சந்தேக நபர்களும் அழைப்பை மறுத்த பின்னர் பாதிக்கப் பட்டவரையும் அவரது நண்பரையும் பிளாஸ்டிக் நாற்காலியை கொண்டு தாக்கியதால் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாக முகமட் ஜெய்த் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முஹம்மது நஜிருல்சாஹின் முகமட் ஹாஷிமையோ 017-8881475 என்ற எண்ணிலும், இன்ஸ்பெக்டர் ரசிமான் ரசித் (019-4565502) என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :