Japanese Prime Minister Fumio Kishida attends Partnership for Global Infrastructure and Investment event on the day of the G20 summit in New Delhi, India, September 9, 2023. REUTERS/Evelyn Hockstein/Pool
ECONOMYNATIONAL

100,000 டிஜிட்டல் நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆசியானுடன் இணைந்து செயல்பட ஜப்பான் விருப்பம்

தோக்கியோ, மே 24 – அடுத்த ஐந்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் 100,000 உயர் திறன் கொண்ட டிஜிட்டல் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசியானுடன் இணைந்து செயல்பட ஜப்பான் விரும்புகிறது என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா நேற்று தெரிவித்தார்.

ஜப்பான் தலைமையிலான ஆசிய சுழியம் உமிழ்வு சமூக கட்டமைப்பின் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியான் (மியான்மர் நீங்கலாக) நாடுகளை உள்ளடக்கிய இரண்டாவது அமைச்சர் நிலைக் கூட்டம்  வரும் ஆகஸ்ட் மாதம் ஜகார்த்தாவில் நடைபெறும் என்று கிஷிடா தனது உரையில்  கூறியதாக  கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த முன்னெடுப்பு செயலாக்கம் காண்கிறது.

அடுத்த தலைமுறை வாகனத் தொழில் துறையை  மேம்படுத்த ஜப்பான் மற்றும் ஆசியான் 2035 ஆம் ஆண்டு வரையிலான  10 ஆண்டு கால வியூகத்தை உருவாக்கும் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று கிஷிடா கூறினார்.

ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த  வியூகம் வகுக்கப்படும்.


Pengarang :