SELANGOR

மாநிலத்தின் முன்னேற்றத்தில் கலை மற்றும் இலக்கியம் முக்கிய அம்சமாக விளங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 4: முன்னேற்றத்தை அடைவதற்கான மாநிலத்தின் முயற்சிகளில் கலை
மற்றும் இலக்கியம் தொடர்ந்து முக்கிய அம்சமாக உள்ளன.

அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அம்சங்களை தனது நிர்வாகமும் தானும் எப்போதும்
ஆதரவளித்து, அங்கீகரிப்பதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

கலை மற்றும் இலக்கியம் வாழ்க்கைக்கு துணையாக மட்டும் இல்லை. ஆனால், அவை
ஒரு தேசத்திற்கும் நாகரிகத்திற்கும் ஓர் அர்த்தமாகவும் அளவுகோலாகவும் விளக்குகிறது
என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை, கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகத் திருவிழா (பிபிஏகேஎல்) 2024இல்
மலேசிய தேசிய எழுத்தாளர் சங்க கவிதை வாசிப்பு இரவில் பஹ்லவான் புவானா
னுகிலான் லடின் நுவாவி கவிதையை அமிருடின் ஒப்புவித்தார்.

உலகெங்கிலும் உள்ள புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும்
வாசகர்கள் ஒன்றுகூடி, புத்தக உலகில் தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான
முக்கிய தளமாக இந்த புத்தகக் கண்காட்சி தொடர்கிறது.


Pengarang :