SELANGOR

கோலக் கிள்ளானில் நாளை கடல் பெருக்கு- பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்து

ஷா ஆலம், ஜூன் 5- கோலக் கிள்ளான் நிலையத்தில் நாளை வரை கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்படுவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5.00 மணி தொடங்கி நாளை காலை வரை ஐந்து மீட்டர் வரை கடல் அலைகள் எழும் என எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட நில அலவலகம் கூறியது.

 நாளை காலை அந்த நிலையத்தில் அலைகள் 4.6 மீட்டர்  வரை உயரும் என்று அந்த நில அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மாலையும் நாளை காலையும்  ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் பெருக்கு காரணமாக பெருக்கெடுக்கும் நீர் கரை தாண்டி வெள்ளத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது என்று தேசிய ஹைட்ரோகிராபிக் மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

கடலோரத்தில் வசிப்பவர்கள் இந்த இயற்கைப் பேரிடரை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு எந்நேரமும் வானிலை தொடர்பான நிலவரங்களை அறிந்திருக்க வேண்டும் என அத்துறை கேட்டுக் கொண்டது.


Pengarang :