SELANGOR

ஐடிலாடா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் குப்பை சேகரிப்பு 20 சதவீதம் அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூன் 5: ஐடிலாடா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் குப்பை சேகரிப்பு 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண நாட்களைக் காட்டிலும் குப்பை சேகரிப்பு ஒரு நாளைக்கு 650 முதல் 700 டன்கள் வரை அதிகரிக்கும் என கேடிஇபி கழிவு மேலாண்மை (கேடிஇபிடபிள்யூஎம்) ஷா ஆலம் கிளையின் செயல்பாட்டுத் தலைவர் முகமட் ரிசல் கரீம் கூறினார்.

“ஐடிலாடா கொண்டாட்டத்திற்கு முன்னதாக ஷா ஆலமைச் சுற்றியுள்ள குப்பை சேகரிப்பில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு நாங்கள் ஏற்கனவே தயாராகிவிட்டோம்.

“384 பகுதிகளில் மொத்தக் குப்பைகளை சேகரிக்க ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளையும் கேடிஇபிடபிள்யூஎம் வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், “Greening The Globe“ திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், உலக சுற்றுச்சூழல் கொண்டாட்டத்தை முன்னிட்டு டென்னோலோஜி மாரா ஷா ஆலம் பல்கலைக்கழகம் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி திட்டம் குறித்து விவரித்தார்.

“இந்த திட்டம் கேடிஇபி கழிவு மேலாண்மையின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) திட்ட அணுகுமுறை முன்னிலைப் படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகள் ஆகும்.

“கூடுதலாக, நாங்கள் “iClean Selangor“ செயலியையும்  விளம்பரப் படுத்துகிறோம் மற்றும் கேடிஇபிடபிள்யூஎம்யின் சொத்துக்களில் ஒன்றான ரோரோ தொட்டிகளையும் காட்சிப் படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :