SELANGOR

வழிபாட்டு தளங்கள், பள்ளிகள்  போன்ற இலாப நோக்கமற்ற பொது இடங்களுக்கு வரி விலக்கு

ஷா ஆலம், ஜூன் 6: வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் மற்றும் இலாப நோக்கம் அற்ற பொது இடங்கள் ஆகியவை மதிப்பீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கூடியவை என்று ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தெரிவித்துள்ளது.

கல்லறைகள் அல்லது தகன இடங்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக கூறிய மாநகரமன்றம்,  முகநூலில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் மூலம் தெரிவித்துள்ளது.

விதிக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட வரியின் மறுமதிப்பீடு குறித்து கருத்து தெரிவித்த எம்பிஎஸ்ஏ, நிர்வாகச் செலவு மற்றும் சேவைச் செலவுகளை வரி வருவாயுடன் சமன்படுத்துவதாக விளக்கியது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு வரியும் 2006 மதிப்பீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் சேவைகளுக்காக எம்பிஎஸ்ஏ ஆல் ஏற்றுகொள்ளப்படும் செலவுகள் சமீபத்திய செலவுகள் ஆகும்.

அதன் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஷா ஆலம் குடியிருப்பாளர்கள் மேலும் தகவலுக்கு எம்பிஎஸ்ஏ இன் முகநூல் பக்கத்தைப் பார்க்கவும்.


Pengarang :