NATIONAL

ஞாயிற்றுக்கிழமை வரை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

கோலாலம்பூர், ஜூன் 7 – ஞாயிற்றுக்கிழமை வரை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

தீபகற்பத்தில் பல மாநிலங்கள் மற்றும் சரவாக் மற்றும் சபாவில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சபாவில், மேற்குக் கடற்கரை, தவாவ், சண்டாக்கான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகள் இடியுடன் கூடிய மழையால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் லாபுவானில் பெரும்பாலான இடங்களிலும் சரவாக்கில் கூச்சிங், சரிகேய், சிபு, முக்கா, பிந்துலு, கபிட், மிரி மற்றும் லிம்பாங்கிலும் கனமழை பெய்யும்.

நாளை கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பெர்லிஸ், கெடா, பகாங் மற்றும் கோலாலம்பூரில் வசிக்கும் மக்கள் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் சரவாக்கில் சிபு, முக்கா, கபிட், மிரி மற்றும் லிம்பாங் உள்ளிட்ட பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :