MEDIA STATEMENT

கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் டஜனுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தீயில் எரிந்தன

ஷா ஆலம், ஜூன் 9 – கிள்ளானில் உள்ள புலாவ் இண்டாவின் மேற்கு துறைமுகத்தில் பல்வேறு தொழில்துறை பொருட்கள் அடங்கிய மொத்தம் 14 கொள்கலன்கள்   இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தன.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில்  பிற்பகல் 1.40 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து அதிகாரிகள் உட்பட 24 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டனர்  என்றார்.

“தீயில் 14 கன்டெய்னர்கள், ஒவ்வொன்றும் 40 அடி அளவு கொண்டவை  பாதிக்கப்பட்டன. வெஸ்ட் போர்ட்  நிர்வாகம் எரியும் கொள்கலன்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகளை  கிரேன்கள் மூலம் மேற்கொண்டது.

“கன்டெய்னர்களின் உள்ளடக்கங்களில் பிளீச் செய்யப்படாத கிராஃப்ட் பேப்பர் அல்லது பேப்பர் போர்டு, சலவை வகை  இயந்திரங்கள், பாலிவினைல் குளோரைடு பாலிமர்கள், சான் பைன் மரம் அத்துடன் சாரக்கட்டு மற்றும் ஷட்டரிங் உபகரணங்கள் இருந்தன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மதியம் 2.39 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


Pengarang :