SELANGOR

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு  நன்கொடை

ஷா ஆலம், ஜூன் 10: அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாடுகள் மற்றும் ஆடுகளை பண்டமாறன் தொகுதியில் உள்ள மொத்தம் 15 மசூதிகள் மற்றும் சூராவ்கள் நன்கொடையாகப் பெற்றன.

சம்பந்தப்பட்ட அனைத்து மசூதி மற்றும் சுராவ்களும் மாநில அரசு மற்றும் பண்டமாறன் தொகுதியின் ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப் பட்ட நன்கொடை கூப்பன்களை பெற்றதாக சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் டக் சீ கூறினார்.

“ஒவ்வொரு தொகுதிகளுக்கும் மாநில அரசு நான்கு மாடுகளையும் 10 ஆடுகளையும் ஒதுக்கியுள்ளது. இருப்பினும், ஆடுகளின் தேவை அதிகம் இருப்பதால் அவைகளை வாங்குவதற்கும் சூராவ்களுக்கு விநியோகிப்பதற்கும் கிட்டத்தட்ட RM15,000 கூடுதல் ஒதுக்கீட்டை பண்டமாறன் தொகுதி வழங்கியது. .

“ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு மசூதியும் ஒரு மாட்டை பெறும் நிலையில் அதே சமயம் சூராவ் இரண்டு ஆடுகளைப் பெறும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த நன்கொடையின் மூலம் அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பாக வரவேற்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.


Pengarang :