NATIONAL

துன்புறுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து வயதுச் சிறுமி மரணம்- தம்பதியர் கைது

ஈப்போ, ஜூன் 11- இங்குள்ள தாமான் மால்கோப்பிலுள்ள ஒரு வீட்டில்
துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து வயதுச் சிறுமி ராஜா
பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

அந்தச் சிறுமி சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து காலை 9.45 மணியளவில் தாங்கள் இது
குறித்து புகார் ஒன்றைப் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.

அந்த சிறுமி திருமணமான தம்பதியரான 66 வயது ஆடவர் மற்றும் 27
வயது பெண்ணின் வளர்ப்பு மகள் என நம்பப்படுவதாக இன்று காலை
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அந்த சிறுமியின் உடல் முழுவதும் கனமான பொருளால்
தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டதோடு அவரது மர்ம உறுப்பு
மற்றும் ஆசனவாயில் காயங்களும் காணப்பட்டன என்று அவர்
சொன்னார்.

நோக்கத்துடன் கொலை செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 302வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அத்தம்பதியரை
தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என்றும்
அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் விசாரணை அதிகாரி
ஏ.எஸ்.பி. நோராஸ்லினா ராய்ஸ் அகமதுவை 013-6282176 என்ற எண்களில்
அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு
அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :