SELANGOR

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 10 ஆடுகள் மற்றும் 4 மாடுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஜூன் 13: இந்த ஆண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பல மசூதிகள்
மற்றும் சூராவ்களுக்கு 10 ஆடுகள் மற்றும் 4 மாடுகளை நன்கொடையாகச் செந்தோசா
தொகுதி வழங்கியது.

இந்த நன்கொடை திட்டம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடவும் மற்றும் இறைச்சியை
தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கவும் வழி வகுத்தது என சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் கூறினார்.

"அல்-பராக்கா மசூதி, தாமான் செந்தோசாவிற்கு அடுத்துள்ள திறந்தவெளி பகுதியில்
பெருநாள் அன்று இரவில் ஒரு பொது விருந்துக்கு ஏற்பாடு செய்கிறோம்.

"ரேவாங் வேலைகள் காலையில் தொடங்கும். 500 பேர் கொண்ட விருந்தினர்களுடன்
மாடுகளையும் ஆடுகளையும் வெட்டும் நிகழ்வு நடைபெறும், அதில் கலந்துகொள்ள
அனைவரையும் அழைக்கிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த ஆண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 1,000 ஆடுகள் மற்றும் 700 மாடுகளை
நன்கொடைகளுக்காக வழங்க மாநில அரசு RM6 மில்லியனை ஒதுக்கியது.

இவை சட்டமன்ற உறுப்பினர்கள், மசூதிகள், சுராவ்கள் மற்றும் அரசு சாரா
நிறுவனங்களின் (NGO) பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.


Pengarang :