NATIONAL

மரம் விழுந்ததால் ஜாலான் பெர்னாமாவில் போக்குவரத்து பாதிப்பு

கோலாலம்பூர், ஜூன் 19- ஜாலான் பெர்னாமா சாலை சந்திப்பில் நேற்றிரவு 9.15 மணியளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இச்சம்பவம் குறித்து விவரித்த பெர்னாமா நிறுவன பாதுகாவலரான ஜிக்ரி ரோஹாய்ஜாட், பாதுகாவலர் சாவடியில் தாம் பணியில் இருந்த போது பலத்த சத்தம் எழுந்ததாகக் கூறினார்.

சத்தம் வந்த திசை நோக்கி சென்ற போது ஜாலான் பெர்னாமா செல்லும் சாலை சந்திப்பில் மரம் ஒன்று குறுக்கே விழுந்துள்ளதைக் கண்டதாக அவர் சொன்னார்.

இந்த சம்பவம் காரணமாக வாகனங்கள் அச்சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக வந்த வாகனமும் சேதமடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அப்பகுதியில் மழை பெய்யவில்லை என்பதோடு வானிலையும் நன்றாக இருந்தது.

தகவல் அறிந்து இரவு 9.28 மணிளவில் சம்பவ இடத்திற்கு வந்த பொது தற்காப்பு படை உறுப்பினர்கள் சுமார் 15 நிமிடங்களில் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி  செய்தனர்.


Pengarang :